#புரட்சிக்கவிஞர்_நினைவு_நாள். #ஏப்ரல்_21
யார் மறப்பார்?
சிந்தையி லேற்றினாய் செந்தமிழ்க் தீயினைத்
தென்னவ ருள்ளந்தெ ளிந்திட வே !
தந்தையின் போர்க்குரல் சந்தத்தி லேற்றியே
தந்தது நீயல்லால் வேறில்லை யே !!
முந்தியி ருந்தவர் தந்ததெ லாம்புது
மொந்தையி லேபழங் கள்ளில்லை யோ !
கந்தையி லாதவர் கஞ்சியி லாதவர்
கண்டது முன்கவித் தேனில்லை யோ !!
பள்ளிக்குச் செல்லடி பாவையுன் னைப்பூட்டப்
பார்ப்பா ரைத்தள்ளி யென்றவ ரே !வெள்ளைநி லாவினை வெண்சோற்றுப் பானையில்
வீட்டின டுப்பினில் கண்டவ ரே !!
வெள்ளத்தில் வெள்ளங்க லந்தது போல்மனம்
மெல்லக்க லப்பது காதலென் றாய் !
அள்ளக்கு றையாத அந்தமிழ் பாச்சுவை
ஆயிரந் தந்ததை யார்மறப் பார்?
- சுப.முருகானந்தம்.
யார் மறப்பார்?
சிந்தையி லேற்றினாய் செந்தமிழ்க் தீயினைத்
தென்னவ ருள்ளந்தெ ளிந்திட வே !
தந்தையின் போர்க்குரல் சந்தத்தி லேற்றியே
தந்தது நீயல்லால் வேறில்லை யே !!
முந்தியி ருந்தவர் தந்ததெ லாம்புது
மொந்தையி லேபழங் கள்ளில்லை யோ !
கந்தையி லாதவர் கஞ்சியி லாதவர்
கண்டது முன்கவித் தேனில்லை யோ !!
பள்ளிக்குச் செல்லடி பாவையுன் னைப்பூட்டப்
பார்ப்பா ரைத்தள்ளி யென்றவ ரே !வெள்ளைநி லாவினை வெண்சோற்றுப் பானையில்
வீட்டின டுப்பினில் கண்டவ ரே !!
வெள்ளத்தில் வெள்ளங்க லந்தது போல்மனம்
மெல்லக்க லப்பது காதலென் றாய் !
அள்ளக்கு றையாத அந்தமிழ் பாச்சுவை
ஆயிரந் தந்ததை யார்மறப் பார்?
- சுப.முருகானந்தம்.