மதுரை
மதுரை
மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 8.9.2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மதுரை தெற்கு வெளி வீதி ஈ.வெ.ரா, நாகம்மையார் மகளிர் மேல் நிலைப்பள்ளி கலைஞர்
அரங்கத்தில் பெரியார் ஆயிரம் வினா - விடை போட்டி நடைபெற்றது. வந்திருந்த
அனைவரையும் நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளரும் பகுத்தறி வாளர் கழ கத்தின்
மாவட்ட செயலாளருமான சுப.முருகானந் தம் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா. நேரு
தொடக்கவுரையாற்றினார்.
அவர் தனது
உரையில்:- புது மாதிரியான போட்டி இது, நானும் நீங்களும் படிப்பதற்கு வழி வகுத்த தந்தை பெரியாரைப் பற்றிய வினாடி வினாப்
போட்டி இது . தமிழகம் மற்றும் புதுவை மாநிலத் தில் 33 மாவட்டங்களில் இந்தப் போட்டி நடை பெறுகின்றது.
பல்வேறு பள்ளிக்கூடங்களில் இருந்து கலந்து
கொண்டிருக்கும் உங்களுக்கு புது மாதிரியான தேர்வு இது.
நீங்கள்
கல்லூரி எல்லாம் முடித்து அய்.ஏ.எஸ், அய்,பி,எஸ், வங்கி மேலாளர் போன்ற பதவிகளுக்கு செல்வதற்கான தேர்வு போன்ற அமைப்பில் நடத்தப்படும் வினாடி
வினாப்போட்டி எழுத்துத் தேர்வு இது. இந்த இளம் வயதிலேயே போட்டித் தேர்வு மாதிரி
அடிப்படையில் தேர்வு எழுதப்போகின்றீர்கள், நல்ல
வாய்ப்பு உங்களுக்கு. நீங்கள் எழுதும் விடைகளைத் திருத்தப்போவது கம்ப்யூட்டர்தான்.
தே ர் வெ ழு து ம் மாணவ மாணவியர் |
இதனைத்
தெரிந்து கொள்ளுங் கள். தந்தை பெரியார் வெறுமனே கடவுள் இல்லை என்று சொன்னவர்
மட்டுமல்ல, பெண்கள் படிக்க,
பெண்கள் உரிமை பெறப் பாடுபட்டவர்,
அரசு பதவிகளுக்கு, படிப்பதற்கு நாம் செல்வதற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ப
போராடியவர் போன்ற பல்வேறு செய்திகளைச் சொல்லி
தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து
திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளியிலிருந்து வந்திருந்த ஒருங்
கிணைப்பாளர் முது நிலை ஆசிரியர் திரு . ராஜன் இந்தப் போட்டி எப்படி நடத்தப்படுகின்றது, எப்படி பென்சிலால் மாணவ மாணவிகள் விடையளிக்க வேண்டும்
போன்ற பல்வேறு செய்தி களைக் கூறி தேர்விற்கான கேள்வித்தாள்களை அனைவருக்கும்
முன்னால் உடைத்து மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
தேர்வு
தொடங்கியதும் தேர்வு கண்காணிப் பாளர்களாக சு.சா. அன்புமதி, பா. சடகோபன், சுப.முருகானந்தம், ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன்,
ஆசிரியர் மு..சேகர், ஆசிரியர் கு.மு.ஜான்சி, மு.கனி போன்றோர் பணியாற்றினர். தேர்வு முடிந்த தும்
அனைவருக்கும் பிஸ்கட் போன்றவை வழங்கப் பட்டன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார
நிறுவனத் தின் சார்பாக கலந்து கொண்ட 148 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திராவிடர்
கழகத்தின் மதுரை மண்டலத் தலைவர் வே. செல்வம், மண்டலச் செயலாளர் மீ.அழகர்சாமி, பேராசிரியர் நம்.சீனிவாசன், மதுரை
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க,அழகர்,
மாவட்ட செயலாளர் இரா.திருப்பதி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் சே.முனியசாமி,
போட்டோ இராதா, இளவரசன், எல்.அய்.சி. வளர்ச்சி அதிகாரி செல்ல கிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை மாணவ மாணவிகளோடு கலந்துகொண்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
யாருமே
யோசிக்காத முறையில் நடத்தப்படும் நிகழ்ச்சி இது என்றும், ஒரு பள்ளியிலிருந்து பல மாணவ மாணவிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு
பாராட்டத்தக்கது என்றும் கூறினர். தொடர்ந்து ஆண்டு, ஆண்டு இந்த மாதிரியான போட்டிகளை நடத்த வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டனர். நமது தோழர்களுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்ககூடிய நிகழ்ச்சியாக அமைந்தது. சரியான வயதில் சரியாக
இளம் தலைமுறையிடம் தந்தை பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு செல்வதற் கான வாய்ப்பு என்றும் நமது
தோழர்கள் கருத்து தெரிவித்தனர். முடிவில்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பா.சடகோபன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment