கவிதைப் பக்கம்



இன்னொரு மெஷின் வேண்டும் -இப்படிக்கு பெற்றோர்கள்  


அரைக்க மிக்சி ; கிரைண்டர்
சமைக்க ஓவன் ; இண்டக்சன் ஸ்டவ்
துவைக்க வாசிங் மெஷின்
சுத்தம் செய்ய வேக்கம் கிளினர்

பார்த்துக் கேட்க டி.வி
பார்க்காமல் கேட்க ரேடியோ
"கூப்பிடு" தூரத்தில் இருப்பவனை/ளை
கூப்பிட ; பேச மொபைல்

வீடுவிட்டு இறங்கினால் டூ வீலர்
காய்கறி வாங்க கார்
காற்று வாங்க ஏ.சி / பேன் -இத்தனையும்
இருந்தாலும் வேண்டும் இன்னொரு மெஷின்

உணவு உடை பேனா
பென்சில் புத்தகம் ஸ்கூல் பீஸ்
ஆட்டோ சார்ஜ் பாக்கெட் மனி
அனைத்துடனும் கலந்து

எங்கள் பிள்ளையைப் போட்டால்
இருபதாண்டு கழித்து

அன்பு அறிவு அழகு
பண்பு பாசம் நேசம்
நாட்டுக்கும் வீட்டிற்கும் சேர்த்து
நல்ல பெயர் பெற்றுத் தரும் மனிதர்களை

எங்களுக்கு ஆக்கித் தர
இன்னொரு மெஷின் வேண்டும் ..

ச்..சு

எங்களுக்கு நேரமாகிவிட்டது ...
பணம் பண்ண பறக்க வேண்டும் ..
..
இப்படிக்கு
பெற்றோர்கள்

                - சுப.முருகானந்தம்





அனாதை  



"பெற்றோர்கள்"
எனும் பெயர்
பெற்றார்கள்
என்னைப் பெற்றதால்
அவர்கள் .........

எனக்கு
அவர்கள்
இட்ட பெயரோ
"லக்ஷ்மி"...

நான்
பெற்ற
பெயரோ ...?

-சுப.முருகானந்தம்







தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!