Monday, January 14, 2013

ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி

ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.  ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர்.  ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.

மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை.   பழக்கத்தினால் வருவது மட்டுமே! எந்தச் சூழலில்  வாழ்கிறோம் என்பதையொட்டியே மொழிப் பேசும் ஆற்றல் வரும்.

  பேசுகின்ற குடும்பத்தில் தங்கி வேலை செய்கின்ற படிப்பே இல்லாத வேலையாட்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.  அதனால், அவர்கள் அறிவாற்றல் உள்ளவர்கள் என்று அர்த்தமா?

எனவே, தவறான ஆங்கில மோகம் , மதிப்பு மாற வேண்டும்.  தமிழ் மொழிச் சிதைவிற்கும் , தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதற்கும் இத்தவறான எண்ணமே காரணம்.

ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசிவிட்டால், அவர்கள் அறிவு அதிகம் பெற்று விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது கூட இத்தவறான எண்ணத்தில்தான்.

மொழிப் பேசும் ஆற்றலை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அதற்கான சூழலில் சில காலம் வாழ்ந்தால் போதும்.

ஆனால், அறிவுத் திறன் என்பது எவ்வளவு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம், எவ்வளவு சுயமாகச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழி என்பதால் அதனைக் கற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே உண்மை.

அதற்காக தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்தல் சரியன்று.

சிந்தனை வளமும், சிறந்த அறிவும் தாய்மொழி மூலமே கிட்டும். இது உறுதி செய்யப்பட்ட உண்மை.

*************************
நன்றி: தப்புத் தாளங்கள் புத்தகம், மஞ்சை. வசந்தன்..,

சபரிமலையில் ஜோதி தெரிந்தது - பக்தர்கள் பரவசம்- தினமலர் செய்தி-15.01.13

மகரசங்கராந்தியன்று கேரள வனத்துறையினர் மற்றும் கேரள மின்சார வாரியம்  (KSEB) இணைந்து ஏற்றப்படும் கற்பூரத்தின் தீபமே மகரஜோதி (மகர விளக்கு). இது அங்கு அமைக்கப்பட்ட காங்கிரிட் மேடையில், அதாவது சபரிமலைக்கு நேர் எதிர் திசையில் எரியூட்டப்படும். சபரிமலையில் இருக்கும் இறைபற்றாளர்கள் கண்களுக்கு இவர்கள் தெரியமாட்டார்கள். சுமார் ஆறுமணிக்கு கிலோ கணக்கில் கற்பூரங்களை பெரிய தட்டிலிட்டு, பற்றவைத்தபின் அதை முதலில் தூக்கி கண்பிப்பார்கள்.  உடனே ஈர சாக்குப் பை கொண்டு அணைப்பார்கள். மறுபடியும் ஏற்றி காண்பிப்பார்கள், ஈரசாக்கு கொண்டு அணைப்பார்கள். மூன்றாம் முறை ஏற்றி காண்பிப்பார்கள், ஈரசாக்கு கொண்டு அணைத்து விட்டு வேலை முடிந்து விட்டது என்று வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். இதுதான் அங்கு வருடாவருடம் நடப்பது. அந்த மலைப்பகுதி கேரள வனக் காவலர்களாலும், அங்கிருக்கும் பொச்சு பம்பா அணையின் மின்னேற்று ஊழியர்களின் கட்டுபாட்டிலும் அந்தப்பகுதி அதிக பாதுகாப்புடன் இருப்பதால் அங்கு யாரும் செல்ல முடிவதில்லை. காரணம் வியாபாரம் தான். இந்த தீபம் இந்த ஊழியர்களின் உதவியோடு தான் ஏற்றப்படுகின்றது. ஏற்றுபவர்களும் இவர்களே. இதை எப்படியோ நண்பர் சைனோஷ் மோப்பம் பிடித்து வந்து விட்டார் போலிருக்கின்றது. அதை அவர் இடுகையின் மூலம் வெளியிட்டுள்ளார், படங்களுடன். உண்மை என்றாவது வெளி வந்துதானே ஆகவேண்டும். காணொளி (வீடியோ) காட்சிகளும் வெளியிட்டுள்ளார்.


ஆதாரம் இரண்டுhttp://sinosh.wordpress.com/2008/08/26/makarajyothy/


Sunday, January 13, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

"புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!"
என்றே சொல்லுங்கள்..
தமிழர்களே...!!

நாம் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்று கூறுவது போல...

மற்ற மொழிக்காரர்கள் தான்
"தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!" 
என்று கூற்வேண்டும்..





"நித்திரையில் உழலும் தமிழா
சித்திரை அல்ல 
'தை' முதல் நாளே 
தமிழருக்குப் புத்தாண்டு..."
                             - புரட்சி கவிஞர்

Wednesday, January 2, 2013

பகுத்தறிவு சூடி



யாரால் எங்கே எப்பொழுது என்ன
எப்படி யாருக்கு ஏன்என வினவிப்
பகுத்து விளைவை அறிந்து வாழ
ஊக்கும் வகையில் வகுத்த பாவே
பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே

01 அறிவியலுணர்வு கொள்
02 ஆருடம் பொய்
03 இழிதொழில் ஏது?
04 ஈட்டுக அறிவு
05 உன்னை அறி
06 ஊர்நலம் பேண்
07 எளிமையே மேல்
08 ஏனெனக் கேள்
09 ஒழுக்கம் உயர்வு
10 ஓம்புக மானுடம்
11 கடவுள் இல்லை
12 காலம் கருது
13 கிலியைக் கொல்
14 கீழ்மை அறு
15 குலம்பல எதற்கு
16 கூடி வாழ்
17 கெடுமதி விடு
18 கேண்மை போற்று
19 கொடுமை எதிர்
20 கோலம் புதுக்கு
21 சடங்குகள் அகற்று
22 சாத்திரம் களவு
23 சிறப்புடன் வாழ்
24 சீர்மை தேவை
25 சுடர்முகம் தூக்கு
26 சூழல் நோக்கு
27 செந்தமிழ் பயில்
28 சேவை செய்
29 சொல்வழி நில்
30 சோர்வு நீக்கு
31 தமிழைப் புதுக்கு
32 தாய்மொழிவழி பயில்
33 திருத்துக பிழையை
34 தீண்டாமை மடமை
35 துருவிப்துருவிப் பார்
36 தூய்மையாய் இரு
37 தெளிவுடன் வாழ்
38 தேனீபோல் உழை
39 தொலைநோக்கு தேவை
40 தோழமை கொள்
41 நல்லவராய் நட
42 நானிலம் சுற்று
43 நிமிர்ந்து நில்
44 நீக்குவன நீக்கு
45 நுணுகி நோக்கு
46 நூல்பல கல்
47 நெறிவழி செல்
48 நேர்மையே கற்பு
49 நொவ்வுடல் தேற்று
50 நோயற்று வாழ்
51 பகுத்தறிந்து ஏற்றிடு
52 பாகுபாட்டை ஒழி
53 பிறரை மதி
54 பீடை ஏது
55 புலமை பெறு
56 பூமியைப் பொதுசெய்
57 பெண்டீர் பெரியோர்
58 பேருளம் கொள்
59 பொலிவுடன் விளங்கு
60 போர்வெறி விலக்கு
61 வல்லவராய் வாழ்
62 வாய்மை போற்று
63 விதி பொய்
64 வீண்கதை தவிர்
65 வுழைப்புப் பொது
66 வெறுப்பு வேண்டா
67 வேற்றுமை விலக்கு
68 மடமையைக் கொல்
69 மானம் பெரிது
70 மிகுபொருள் கேடு
71 மீன்போல் இயங்கு
72 முயற்சியே வெற்றி
73 மூடநம்பிக்கையை விலக்கு
74 மெய்யினைத் தேடு
75 மேன்மை நடத்தையில்
76 மொழிபல அறி
78 மோழைமை ஒழி


பதிவர் யரலவழள அவர்களுக்கு நன்றியுடன் 

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!