Saturday, May 2, 2020

கண்ணீரால் நன்றிதனைக் கூறு! கூறு!!

நன்றி: மே2' 2020 #விடுதலை_ஞாயிறு_மலர்

ஊர்முழுதுங் காப்பதற்கு ஓடியவர் தானிறந்தால்
உன்நெஞ்சம் வாடலையோ அய்யோ அய்யோ
சீரிழந்தாய் மானிடனே செய்ததென்ன தீச்செயலுந்
தீந்தமிழர் வாழ்ந்தநெறி பொய்யோ பொய்யோ

தூங்காமல் நாள்பொழுது தொண்டாற்றி நிற்பவர்க்குத்
தொல்லையினி தந்திடாதே அப்பா! அப்பா!!
தீங்கான நுண்கிருமி தீயிட்ட பின்னருனைத்
தீண்டுமென எண்ணிடாதே தப்பா! தப்பா!!

ஆழ்குழியில் வைத்தபின்னே அண்டாது மேலெழுந்து
அச்சத்தா லாடுவாயோ வெம்பி வெம்பி
பாழ்மடமை தள்ளிவிட்டுப் பக்கதுணை யாயிருந்து
பாராட்டு பண்புடனே தம்பி தம்பி

பூட்டிவிட்ட கோயிலுக்குள் போனதடா சாமியெல்லாம்
பொய்க்காமல் காத்ததெலாம் யாரு? யாரு??
காட்டாதே உன்குணத்தை காடுசெல்லும் வேளையிலே
கண்ணீரால் நன்றிதனைக் கூறு! கூறு!!

- சுப.முருகானந்தம்.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!