Saturday, November 17, 2018

தன்னலம் ஏனோ?

பெற்றதும் இருவர்; பிழைத்ததும்
அகத்தார்

பேணிய திறத்தாலே!

சுற்றமும் நட்பும் சுமந்துநல் வாழ்வைத்

 துவக்கின புறத்தாலே!!

கற்றதும் கல்வி கலைபல ஊரார்

காட்டிய அருளாலே!!

உற்றநற் பயனை உதறியுன் நலம்தான்

 ஓம்புதல் அறமாமோ?

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!