Tuesday, December 4, 2012

'ஒன்பது' முதல் 'எண்பது' வரைக்கும்


பெரும்பேறு  எமக்கிங்கு வேறெதுவோ .......!
                                                                     சுப.முருகானந்தம் ,மாவட்ட செயலாளர் ,
                                                                        பகுத்தறிவாளர் கழகம் ,மதுரை மாநகர் .


தந்தை பெரியார் தொலைநோக்கு
தந்த தனியாட்  பெரும்படையே ..!
அய்யா சென்ற அடிச்சுவடு
அணுவும் மாறா அருட்கொடையே...!!

பெரியார் இயலின் திறன்விளக்கப்
பெருகிப் பாய்ந்திடும் நீரூற்றே ....!
'ஒன்பது' முதல் 'எண்பது' வரைக்கும்
ஓய்வே காணாத பூங்காற்றே .....!!

வாழ்வியல் சொல்லி வழிநடத்தும்
வளமே ! உங்கள் வாழ்நாளில்
"பிறந்தோம் ..வளர்ந்தோம் ..வாழ்கின்றோம் "
பெரும்பேறு எமக்கிங்கு வேறெதுவோ...!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!