Sunday, January 16, 2011

ஆளுமையின் அடிப்படை

1.
 வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை. 

2.
 மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும். 

3.
 திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள். 

4.
 நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை. 

5.
 உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம். 

6.
 குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம். 

7.
 கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 

8.
 மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல். 

9.
 நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம். 

10.
 நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும். 

11.
 சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை. 

12.
 முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம். 

13.
 ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை. 

14.
 உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்? 

15.
 நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை. 

16.
 கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று. 

17.
 தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும். 

18.
 பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல். 

19.
 கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம். 

20.
 பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன். 

21.
 தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம். 

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!