Tuesday, January 25, 2011

குறள் தீண்டத் தகாததாம்!





1796 இல் சென்னைக்கு அரசுத் துறைக்குப் பணி யாற்ற வந்த எல்லீஸ்துரை யவர்கள் தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன் றைத் தாம்வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்தி தாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தார் என்றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியரின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் கேட்க, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம்பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணிச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ்துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.
-------------(குறளும் அயோத்தி தாசரும் என்ற தலையங்கத் தில் செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 2000)

திரு.எல்லீஸ் துரை என்பவர்தான் திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் .அவரது பெயரால் மதுரை மைய பகுதியில் எல்லீஸ் நகர் அமைந்துள்ளது.......  - அகில் 
                                      

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!