Thursday, August 23, 2012

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்

இங்கர்சாலின் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளில் சில முக்கியமான பொன்மொழிகளைக் கீழே தருகி றோம்.
  • மனிதன் வாழவேண்டுமானால், மனிதன் முன்னேற வேண்டுமானால் மதத்தை அழித்தாக வேண்டும்.
  • உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம்.
  • உண்மை முன்னேற்றத்தின் அடித்தளம்; சுவர்கள்; அழகிய கட்டடம்.
  • உண்மை இன்பத்தின் தாய். உண்மை மனிதனை நாகரிகமாக்கு கிறது; தூய்மையாக்குகிறது. மனிதனுக்கு தைரியம் அளிக்கிறது.
  • உண்மைதான் பகுத்தறிவுவாதி யின் வாளும், கேடயமும்.
  • சிந்தனையில் மலரும் உண்மை யான எண்ணத்தை யார் யார் வெளி யிட மறுக்கிறார்களோ, மறுக்கப் படுகிறார்களோ, அவர்கள் மனித நாகரிகத்தின் எதிரிகள்; முன்னேற் றத்தின் பகைவர்கள்.
  • அறிவாற்றலால் தீர்க்கப்படாத எந்தப் பிரச்சினையும் வன்முறையால் தீர்க்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும்.
  • மூடநம்பிக்கை மனித ரத்தத்தைச் சிந்தச் செய்கிறது; விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகிறது.
  • சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும். சலிப்பு காட் டாமல உழைக்க வேண்டும். நாம் தைரியமாக இருக்கவும், இன்பமாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
  • கல்வி மனிதனுக்கு உண்மை யான அறிவையும், ஆராய்ச்சித் திறமையையும் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனத்தினுள் எவ்விதமான மூட நம்பிக்கையும் புகவிடக்கூடாது.
  • குழந்தைகளுக்கு நம்ப அல்ல; சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண் டும்.
  • மதவாதிகள், மந்திரவாதிகள், குறி சொல்வோர்கள் ஆகியோரை உங்கள் குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
  • இதுவரை மனித சமுதாயம் செய்துள்ள கோடானு கோடி பிரார்த்தனைகளில் ஒன்றுக்காவது ஆண்டவன் விடை அளித்ததாக உலக வரலாற்றில் சான்று உண்டா?
பகுத்தறிவாளர்களாகிய நாம் தந்தை பெரியார், அறிஞர் இங்கர்சால் ஆகியோரின் பொன்மொழிகளை உள்ளத்தில் பதிய வைத்து வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்வோமாக!

Saturday, August 18, 2012

தந்தை பெரியாரின் தொலை நோக்கு



                            தி.மு.க  தொடங்கப்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு , முகத்தில் சோர்வோடு இருந்த பெரியாரை , அப்போது அவருடன் பணிபுரிந்த பத்திரிக்கையாளர் சே.வி.கே அவர்கள், "அய்யா ரொம்பக் கவலையில் இருப்பதாகத் தெரிகிறதே? கழகத்திலிருந்து அண்ணாவோடு ஏராளமானவர்கள் வெளியேறிவிட்டார்களே என்ற கவலையா ?"என்று கேட்டிருக்கிறார்.
                               இயக்க வரலாற்றில் எத்தனையோ பேர் விலகிச் சென்றிருக்கிறார்கள் எனவே அதுபற்றி தான் கவலைப்படவில்லை என்று கூறிய தந்தை பெரியார், " நீ சொன்னதைப் போல என் மனதுக்குள் ஒரு கவலை இருந்து வருவது உண்மைதான்.... அண்ணாதுரை எதற்காக நமது கழகத்தில இருந்து விலகிச் சென்று புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்? அவருக்கு அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.என்னோடு இருக்கும் வரையிலும் நான் அதற்கு அனுமதி தர மாட்டேன்.அதனால்,வெளியேறிவிட்டார். என்னுடைய கொள்கைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றவே முடியாது என்பதில் திட்டவட்டமான தீர்மானத்தைச் செய்துவிட்டுத்தான்,கழகத்தை இயக்கமாகவே நடத்தி வருகிறேன்.அண்ணாதுரையோ தி.மு.க என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அரசியல் என்று இறங்கிவிட்டால்,பிறகு தேர்தல்களே முக்கியமாகிவிடும்.தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அதற்குப் பண பலம் தேவை.பிறகு, பல தரப்பிலிருந்தும் பண வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.அப்போதே கொள்கைகள் எல்லாம் பின்னுககுத் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு போய்விடும். இது ஒருபுறம் இருக்க,தப்பித் தவறி தி.மு.க ஆளும் கட்சியாக மாறிவிட்டாலோ, அதிலிருந்துதான் திராவிடர் கழகக் கொள்கைக்கே சரிவு ஏற்பட்டுவிடும்.
                        ஏனெனில், ஆளும்கட்சியாக மாறிவிட்ட பிறகு, கட்சிக்குள்ளேயே பல மையங்கள் தோன்றிவிடும்.அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பதில் பலரும் இறங்கிவிடுவார்கள்.ஏனெனில், சமுதாயத்தில வசதியாக வாழவேண்டும் என்ற ஆசை இல்லாமல் போகாது.இதன் விளைவாகக் கட்சிக்கே கெட்ட பெயர் ஏற்படும் அளவுக்குச் சென்றுவிடும். அந்தச் சமயம் பார்த்து, என் கொள்கை ரீதியான எதிரிகள் ஊழல் கற்களால் திராவிட இய்க்கத்துக் கொள்கைகளையே அழிக்கப் பார்ப்பார்கள். அது மட்டுமல்ல, தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றுமானால்,அதன் பிறகு கட்சிக்கள் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளாலும், போட்டியாலும் கழகமே பலவிதமான பிளவுகளுக்கு உள்ளாவதை தவிர்க்க இயலாது." என்று நீண்ட உரையை நிகழ்த்தியுள்ளார்.
-திரு.இரா.கண்ணன் எழுதிய " அண்ணா  ஒரு சாதரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை " புத்தகத்திலிருந்து
                                       

Monday, August 13, 2012

நூல்கள் - நூலகம் அறிஞர்கள் பார்வையில்....






  • எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் - - டாக்டர் அம்பேத்கர்.
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் - - பகத்சிங்.
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது வரும் முன் பணத் தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் - சார்லி சாப்ளின்
  • எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் -- - சேகுவாரா
  • ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம். - தோழர் சிங்காரவேலர்
  • வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும் சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு -- - சி.கே. செஸ்டர்டன்
  • புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது - -எலன் எக்ஸ்லே
  • உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும். - - வால்டேர்
  • ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருப வன் அதைவிடப் பெரிய முட்டாள் - -அரேபியப் பழமொழி
  • உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத் தில் உள்ளது. -- - கூகிவா திவாங்கோ
  • ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம்  அடையாளம் காணப்படுகிறது - - ஜார்ஜ் பெர்னாட்ஷா
  • போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங் களை வாசிக்கத் தேவைப்படுகிறது! - எல்பர்ட்கிரிக்ஸ்
  • புத்தகங்கள் இருந்தால்போதும் சிறைக் கம்பிகளும் கொட்டடிகளும் ஒரு வரை அடைத்து வைக்க முடியாது. - - மாவீரன் பகத்சிங்
  • ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது - - பிரடெரிக் எங்கெல்ஸ்
  • காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் - - எட்வின் பி. விப்பிள்
  • ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததி யினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் - புத்தகங்களே - ஹென்றிதொறோ
  • நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத் துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம் - - கரோலின் கோர்டன்
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் - மார்டின் லூதர்கிங்
  • ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் - வின்ஸ்டன் சர்ச்சில்
  • ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித் தாராம் - - காந்தியார்
  • தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப் பட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச் சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார் - - நேரு
  • என் கல்லறையில் மறக்காமல் எழு துங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று - - பெட்ரண்ட்ரஸல்
  • மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று  வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார் - - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்
  • கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் - - தந்தை பெரியார்
  • வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் - நெல்சன் மண்டேலா றீ    பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
  • குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
  • பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம் - போவீ
  • புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கி றோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம் - - சீனப் பழமொழி
  • நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும்போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை. ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள். -- கிறிஸ்டோபர் மார்லே
  • புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம் - - சீனப் பழமொழி
  • ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை - ஆர்.டி. கம்மிஸ்
  • ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை - சார்லஸ் இலியட்
  • விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம் - அறிஞர் அண்ணா
  • ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியதுதான் - - டோனி மாரிஸன்
  • ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது; அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். - - ஆர்.டி. கம்மிங்
  • ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்லன் - - மார்க் ட்வைன்
  • உன் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக் குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள் - - ஜேம்ஸ்ரஸல்
·         தொகுப்பு: முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை

Saturday, August 11, 2012

எளியவா்களின் உழைப்பினால் தான் நாம் சுகமாக வாழ முடிகிறது .அவா்களைப பாராட்டிப் போற்றுவோம்.....


             எனக்கு நண்பா் ஒருவா் சமீபத்தில் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அதில் விவசாயிகள் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்....துப்புரவுத் தொழிலாளிகள் இல்லாத பூமியை நினைத்துப் பாருங்கள்.......தொழிலாளா்களே இல்லாவிட்டால் எப்படியிருக்குமென எண்ணிப்பாருங்கள்.... நாம் எப்போதும் அற்புதம்(wonder) செய்பவா்களையே தேடிக் கொண்டிருக்கிறோம்......நம் துன்பம்(wounds) துடைப்பவா்களை பார்க்காமலே போய்விடுகிறோம்..... நன்றியுணா்வு மட்டும் தான் மனிதா்கள் காட்ட வேண்டிய மகத்தான உணா்வு.....என்றிருந்தது.
          இன்று ஒரு புத்தகத்தில் பெருந்தலைவா் காமராசா் அவா்களைப் பற்றிய ஒரு குறிப்பு வந்திருந்தது.....கிருட்டிணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி கிராமத்தின் ஒரு உயா்நிலைப்பள்ளி விழாவிற்கு வந்திருந்த காமராசா் அவா்களைப் பற்றி  கவிஞர் பெருமாள்ராசு என்பவா் வாழ்த்தி வரவேற்று கவிதை வாசித்திருக்கிறார்,அப்போது எங்கோ பார்த்துக் கொண்டு அமா்ந்திருந்த காமராசா் அவா்கள் தான் பேசும் போது நன்றாக கவிதை வாசித்தீா்கள்.... ஒரு முதலமைச்சா் என்றால் எல்லோரும் பாராட்டி எழுதுவாங்க... நான் சொல்ல நினைக்கறது என்னான்னா....உங்க கவி நல்லா இருந்ததால சொல்றேன்...
         இந்தக் கிராமத்திலே ஒரு தோட்டி வருடம் பூராவும் நல்லா தெருவெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தினார்னு அவரைப் பத்தி எழுதுங்க....
    இங்கே ஒரு தையல்காரா் வருடம் பூராவும் நல்லா சுத்தமா தைச்சிக் கொடுத்தார்னு அவரைப் பத்தி ஒரு நல்ல கவி எழுதுங்க....
       ஒரு செட்டியார் வருடம் பூராவும் கலப்படம் இல்லாம நல்ல வியாபாரம் செஞ்சாருன்னு அவரைப் பத்தி ஒரு கவி எழுதுங்க....
    இவங்களைப் பத்தி யாரும் கவலைப்பட மாட்டாங்க.. அரசாங்கமும் கவலைப்படாது...நீங்க அவங்களைப் பத்தி எழுதினா அவங்க சந்தோசப்படுவாங்க அவங்களை ஒரு மாலை போட்டுப் பாராட்டுங்க ... அதைப் பார்த்து மத்தவங்களும் நல்லது செய்ய ஆசைப்படுவாங்க...... என்று பேசியிருக்கிறார்.  எளியவா்களின் உழைப்பினால் தான் நாம் சுகமாக வாழ முடிகிறது .அவா்களைப பாராட்டிப் போற்றுவோம்.....

Friday, August 10, 2012

காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....


இது கட்டுக் கதையல்ல.
கண்ணீரால் நிறைந்த நிஜம்.
அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்...

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் .., முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ஏம்பா மண்ணாங்கட்டி
அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடுஎன்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார்.

முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயாஎன்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடாஎன்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னுதேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. முதல்வர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ஐயா நீங்களும் வாங்கஎன்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதரல்வரின் அறையில் உள்ள சோஃபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு நான் தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்கன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!