எனக்கு நண்பா் ஒருவா் சமீபத்தில் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.
அதில்
“விவசாயிகள் இல்லாத உலகத்தை கற்பனை செய்து
பாருங்கள்....துப்புரவுத் தொழிலாளிகள் இல்லாத பூமியை நினைத்துப்
பாருங்கள்.......தொழிலாளா்களே இல்லாவிட்டால் எப்படியிருக்குமென
எண்ணிப்பாருங்கள்.... நாம் எப்போதும் அற்புதம்(wonder) செய்பவா்களையே தேடிக் கொண்டிருக்கிறோம்......நம்
துன்பம்(wounds) துடைப்பவா்களை பார்க்காமலே போய்விடுகிறோம்..... நன்றியுணா்வு மட்டும் தான்
மனிதா்கள் காட்ட வேண்டிய மகத்தான உணா்வு.....என்றிருந்தது.”
இந்தக் கிராமத்திலே ஒரு தோட்டி வருடம்
பூராவும் நல்லா தெருவெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தினார்னு அவரைப் பத்தி
எழுதுங்க....
இங்கே ஒரு தையல்காரா் வருடம் பூராவும் நல்லா
சுத்தமா தைச்சிக் கொடுத்தார்னு அவரைப் பத்தி ஒரு நல்ல கவி எழுதுங்க....
ஒரு செட்டியார் வருடம் பூராவும் கலப்படம்
இல்லாம நல்ல வியாபாரம் செஞ்சாருன்னு அவரைப் பத்தி ஒரு கவி எழுதுங்க....
இவங்களைப் பத்தி யாரும் கவலைப்பட மாட்டாங்க..
அரசாங்கமும் கவலைப்படாது...நீங்க அவங்களைப் பத்தி எழுதினா அவங்க சந்தோசப்படுவாங்க அவங்களை ஒரு மாலை போட்டுப் பாராட்டுங்க ... அதைப்
பார்த்து மத்தவங்களும் நல்லது செய்ய ஆசைப்படுவாங்க......” என்று பேசியிருக்கிறார். எளியவா்களின்
உழைப்பினால் தான் நாம் சுகமாக வாழ முடிகிறது .அவா்களைப பாராட்டிப் போற்றுவோம்.....
No comments:
Post a Comment