இங்கர்சாலின் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளில் சில முக்கியமான பொன்மொழிகளைக் கீழே தருகி றோம்.
- மனிதன் வாழவேண்டுமானால், மனிதன் முன்னேற வேண்டுமானால் மதத்தை அழித்தாக வேண்டும்.
- உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம்.
- உண்மை முன்னேற்றத்தின் அடித்தளம்; சுவர்கள்; அழகிய கட்டடம்.
- உண்மை இன்பத்தின் தாய். உண்மை மனிதனை நாகரிகமாக்கு கிறது; தூய்மையாக்குகிறது. மனிதனுக்கு தைரியம் அளிக்கிறது.
- உண்மைதான் பகுத்தறிவுவாதி யின் வாளும், கேடயமும்.
- சிந்தனையில் மலரும் உண்மை யான எண்ணத்தை யார் யார் வெளி யிட மறுக்கிறார்களோ, மறுக்கப் படுகிறார்களோ, அவர்கள் மனித நாகரிகத்தின் எதிரிகள்; முன்னேற் றத்தின் பகைவர்கள்.
- அறிவாற்றலால் தீர்க்கப்படாத எந்தப் பிரச்சினையும் வன்முறையால் தீர்க்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும்.
- மூடநம்பிக்கை மனித ரத்தத்தைச் சிந்தச் செய்கிறது; விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகிறது.
- சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும். சலிப்பு காட் டாமல உழைக்க வேண்டும். நாம் தைரியமாக இருக்கவும், இன்பமாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
- கல்வி மனிதனுக்கு உண்மை யான அறிவையும், ஆராய்ச்சித் திறமையையும் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனத்தினுள் எவ்விதமான மூட நம்பிக்கையும் புகவிடக்கூடாது.
- குழந்தைகளுக்கு நம்ப அல்ல; சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண் டும்.
- மதவாதிகள், மந்திரவாதிகள், குறி சொல்வோர்கள் ஆகியோரை உங்கள் குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
- இதுவரை மனித சமுதாயம் செய்துள்ள கோடானு கோடி பிரார்த்தனைகளில் ஒன்றுக்காவது ஆண்டவன் விடை அளித்ததாக உலக வரலாற்றில் சான்று உண்டா?
No comments:
Post a Comment