திருக்குறளைப்
படித்து அதைத்தன் வாழ்க்கைமுறையாகவே கடைபிடித்தவர்
நம்மை யாராவது வாழ்க்கையில் ஒரு முறை திட்டினாலோ ,நம் மீது
கோபத்தோடு பேசிவிட்டாலோ வாழ்நாளெல்லாம் அதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் மீது பகைமை பாராட்டும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.....
தந்தை பெரியாரிடம், பேரறிஞர் அண்ணா நடந்து கொண்டவிதத்தை அவரே சொல்கிறார்
..... கேளுங்கள்....
தி.மு.க., தொடக்க விழாவின் போது பேரறிஞர்
அண்ணா பேசியது :
“இன்றும் கூட என்
மனக்கண் முன்னே ஒரு காட்சி ஓடி வந்து நிற்கிறது. ஈரோட்டில் ‘விடுதலை’ காரியாலயத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது ‘விடுதலை’யில் சென்னை கார்ப்பரேசனைப் பற்றித் தலையங்கம் தீட்டினேன். ‘ரிப்பன் கட்டட்துச் சீமான்கள்’ என்பது
தான் தலைப்பு. அன்று மாலை நான்
ஈரோட்டில் பெரியாரின் மூன்றடுக்கு மாளிகையில் உச்சியில் உலாவிக் கொண்டிருந்த நேரத்தில், பெரியார் மூன்று மாடிகளையும் கஷ்ட்த்துடன் படியேறிக் கடந்து வந்து என் முதுகைத்
தட்டி, ‘அண்ணாதுரை , உன்
தலையங்கம் ரொம்ப நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷம்’ என்று வெகுவாகப் பாராட்டினார்.
இதைக் கேட்ட நான், ‘இதற்காக ஏன் இவ்வளவு
கஷ்டப்பட்டு மாடி ஏறி வர வேண்டும் ? சாப்பிடக்
கீழே வ்ரும்போது சிரமமின்றி கூறியிருக்கலாமே ?’ என்று தெரிவித்தேன்.அதற்குப்
பெரியார்,’என்மதில் நல்லதென்று தோன்றியது.அதை
உடனே கூறிவிட வேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால், நான் பிறரைப் புகழ்ந்து பேசிப் பழக்கப்பட்டவல்ல.
ஆகவே, உடனே சொல்லிவிட வேண்டுமென்று வந்து சொல்லிவிட்டேன்
‘ என்று சொன்னார்.
இந்த ஒரு சம்பவம் போதுமே எனக்கு,
ஆயுள் பூராவும் அவரிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லையே, புகழ்ந்த பிறகு தானே திட்டுகிறார்
! எனவேதான் அவர் திட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.” இது தான் அண்ணா.
திருக்குறளைப் படித்து அதைத் தன் வாழ்க்கைமுறையாகவே கடைபிடித்தவர்
அல்லவா பேரறிஞர் அண்ணா......
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று .” குறள் 108
உரை ; ஒருவர் நமக்குச் செய்த நன்மையை
மறப்பது நல்லதல்ல. அவர் தீமை
செய்திருந்தால் அதை மட்டும்
அக்கணமே மறந்து விடுவது நல்லது.
No comments:
Post a Comment