மதுரை , அனுப்பானடியில்,மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தந்தை பெரியாரின்
134 வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் உள்ள ,அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை
9.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில், பள்ளியின்
தலைமையாசிரியர் திருமதி. பிரேமா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு ப.க மாநகர் மாவட்ட துணைத்தலைவரும்.
ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரியுமான அரிமா .தோழர். செல்ல.கிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார்.மதுரை மாநகராட்சியின் அனுப்பானடி வட்டத்தினுடைய மாமன்ற உறுப்பினர்.திருமதி.காதர் கணேசன் அவர்களும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.ஜி.கணேசன் அவர்களும்,மானமிகு.வீ.கார்மேகம் (சார் பதிவாளர் -ஓய்வு)
அவர்களும் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.பள்ளி
மாணவ மாணவியர் 100 பேருக்கும் தலைமையாசிரியரின் வேண்டுகோளுக்கிண்ங்க
100 எவர்சில்வர் தட்டுக்கள் வழங்கப்பட்டன. மாணவ
மாணவியர், ஆசிரியர்கள்,அலுவலர்களுக்கு இனிப்பு,எழுதுகோல்கள் வழங்கப்பட்டன..தந்தை பெரியாரின் மாணவர்களுக்கான அறிவுரைகள்
துண்டறிக்கையாகவும்,ஸ்டிக்கர்களாகவும் வழங்கப்பட்டன.பள்ளித் தலைமையாசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும் தந்தை
பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்
எழுதிய நூல்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு தந்தை பெரியாருடைய படமும்,பள்ளி நூலகத்திற்கு பெரியார் 1000 புத்தகங்களும் வழங்கப்பட்டன.தந்தை பெரியாரின் உழைப்பு, பெண்கல்விக்காக அவர் எடுத்த
முயற்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்கள்
ஆகியவற்றை விளக்கி மதுரை மாநகர் மாவட்ட
பகுத்தறிவாளர் கழக செயலாளர் சுப.முருகானந்தம்
எடுத்துரைத்து, "நம்மால் முடியாதது யாராலும் முடியாது;
யாராலும் முடியாதது நம்மால் முடியும்" என்ற
தமிழர் தலைவர் அய்யா அவர்களின் தன்னம்பிக்கை கருத்தினை மாணவ மாணவியர் உறுதி மொழி கூறிட,
உரையை முடித்தார். விழாவில், ப.க. தோழரும், இந்தியன் ஆயில் கழக துணை மேலாளருமான அரிமா . இரா.பழனிவேல்ராசன்
அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.இறுதியில், பள்ளித் தமிழாசிரியர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment