Wednesday, September 19, 2012

தந்தை பெரியார் 134 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....


தந்தை பெரியார் 134 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....



மனிதனை வேறுபடுத்தும் மதத்தை
மனிதனை மிருகமாக்கும் சாதியை
தொழிலாளர் உழைப்பை ஏமாற்றும் முதலாளித்துவத்தை
பெண்களை அடக்கிவைக்க்கும் அடிமைத்தனத்தை
தன்னம்பிக்கையைப் போக்கும் கடவுள் கிறுக்கை
சாகும்வரை போராடி
சந்தி சிரிக்க வைத்தவரே..!

சோதனைக்குழாயில் குழந்தை..
சட்டைப் பையில் கம்பியில்லா தொலைபேசி
தொப்பியில் ரேடியோ .
முகம் பார்த்துக்கொண்டே .பேச வசதி
ஓர் இடத்தில் இருந்து கொண்டே
பல இடங்களில் உள்ள மக்களுக்கு
கல்வி பயிற்றும் சாதனம்......

இன்னும் எத்தனை எத்தனை....

அய்யா ! உன் எண்ணமெலாம்
அரங்கேறிவிட்டதய்யா.......!

"கண்ணுக்கோ காதுக்கோ
கைக்ககோ  காலூக்கோ
உடம்பில் எங்கு வலித்தாலும்
'வலி'க்கிறது என்றே உணரும் மனிதன்
உலகின் எந்த ஒரு மூலையில்
ஒருவனுக்கு துன்பம் ஏற்பட்டாலும்
அதைத் தனக்கு ஏற்பட்ட
துன்பமாக எண்ணித்
துடிக்கவேண்டும்....." என்றாயே..!!

உன் நிறைவான சமுதாயம் காண
நித்தம் நித்தம்  களம் காண்போம்..!!

கணினியில் தமிழ் உலவக்
காரணமாய் இருந்தவரே.....!
எழுத்துச் சீர்திருத்த மேதையே....!1

நீ தந்த தமிழெடுத்து
நின் புகழைப் பாடுதல்லால்
ஏதுண்டு எமக்கு இலக்கு....?



No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!