நான் அறிந்தவரையில், பலர் , ஆண்டவன் எந்த நேரத்திலும் வரலாம், வந்தால் போதும் என்ற அச்சமற்ற நிலையில் இல்லை.
சத்தியப் பிரமாணமாகச் சொல்கிறேன், சரக்கு அறுபத்து ஆறுக்கு வாங்கியது, வழிச்செலவு, வட்டி, கடைச்செலவு இவை ந
ாலு
மட்டும் ஆகுது.நீங்களாக இஷ்டப்பட்டு எனக்கு ஏதாகிலும் இலாபம் போட்டுக்
கொடுத்தால் போதும். பழனியாண்டவர் படத்துக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு
சொல்கிறேன், நம்பினாலும் சரி , இல்லை என்றாலும் சரி, என்று, நாற்பத்தெட்டு
ரூபாய்க்கு வாங்கிய சரக்கு பற்றி 'புளூகு" பேசி இலாப வேட்டை ஆடும் பெரிய
புள்ளி எப்போது வேண்டுமானாலும் ஆண்டவன் வரட்டும் என்றா எண்ணுவார் !
வந்தாரானால் நிலைமை என்ன ஆகும்?
அட பாதகா ! பாலாபிஷேகமும், பன்னீர் அபிஷேகமும், பல்லக்கு உற்சவமும் நீ நடத்துவது,இப்படி அண்டப்புளுகு பேசி அடிக்கிற கொள்ளைப் பணத்தைக் கொண்டு தானா ? எத்தனை நெஞ்சழுத்தத்துடன், என் மீது ஆணையிட்டு ஏமாற்றப் பார்க்கிறாய் ! 66 கொடுத்தா வாங்கினாய் ? சொல்லு !! என்னைப் பார்த்துச் சொல்லு !! ஆறுமுகனே ! பன்னிரு தோளா! என்றெல்லாம் இந்தப் பொய் உமிழும் வாயினால் பூஜிக்கிறாயே , எவ்வளவு துணிவு உனக்கு ! - என்று என்னென்ன கேட்பாரோ ஏதேது பேசுவாரோ என்ற கிலி அல்லவா அவனைப் பிடித்து ஆட்டும் !
நான் நினைக்கும் போது ,
நீ வர வேண்டும்
என்ற முறை வைத்துக் கொண்டால், இந்த ஆபத்து வராதல்லவா?
(பழனி ,பழனி ஆண்டவர் கல்லூரியில் பேரறிஞர் அண்ணா பேசுவதற்கு முன் பாடப்பட்ட பக்தி பாடல் குறித்து ,அவருக்கு எழுந்த சிந்தனை ஊற்றின் சிறு துளி."தம்பிக்கு கடிதங்கள் -21-11-' 65 )

No comments:
Post a Comment