Saturday, January 29, 2011

பாரதிஜிப்ரான் கவிதைகள்: குழந்தைகள் சூழ்ந்த வானம் 3

பாரதிஜிப்ரான் கவிதைகள்: குழந்தைகள் சூழ்ந்த வானம் 3

Friday, January 28, 2011

உலகத் தமிழர்களின் ஒரே சந்தேகம் .....


உலகத் தமிழர்களின் ஒரே சந்தேகம் ..... 
ஓ....சூரியனே ... 
இளஞ்சூரியனே .... 
நீ வாயில் குதப்பிய 
வெற்றிலைக் காவியை 
இப்படி வானவீதி முழுவதுமா 
துப்ப வேண்டும் ...... 
அதில் மஞ்சள் கலந்திருப்பதென்ன விந்தை ...! 
நீ வான நாட்டின் மூத்த பெருந் தந்தை ...! ! 

ஓ....பகலவனே ... 
ஒட்டுத் துணியும் மேனிக்கின்றி 
ஒட்டிய வயிறுடன் நாங்கள் 
சாலைகளில் தூங்கும்போது ... 

நீ 
உடுத்தும் துணியும் 
நடக்கும் சாலையும் கூட 
பட்டுத் துணி உடுத்தியுள்ள 
பாரபட்சம் ஏனோ ..? 

ஓ ...அந்திக் கதிரவனே ... 
நீ ..மலைகளுக்கிடையில் விழுந்து 
தற்கொலை செய்துகொண்ட 
அந்த நொடிகளுக்கு பிறகு ... 
உன் நிலா மனைவி வடிக்கும் 
கண்ணீர் ....அந்தோ ... 

வானம் முழுதும் சிதறிக்கிடக்கும் 
வெள்ளிப் பூக்களாய் .. 
வைகறையில் 
புல் தாங்கும் பனித்துளிகளாய் ... 
மழையாய் ...நதியாய்...கடலாய் .. 
பெருகியோடுவதை 
கொஞ்சம் தடுத்து நிறுத்தேன் ....! 

ஓ ..ஒளி ஞாயிறே ...! 

ஆமாம் .. 
எனக்கொரு சந்தேகம் .... 
எப்போதோ ..எந்த தேசத்திலோ .. 
நீ மறைவதே இல்லையாமே ... 
ஆனால் 
எங்கள் தேசத்தில் மட்டும் ஏன் 
இப்போது வரை 
எப்போதும் 
ஒருமுறை கூட... நீ .... 
உதிக்கவேயில்லை ....??? 

சுப.முருகானந்தம்

Tuesday, January 25, 2011

குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க?



குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க?



படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?

சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்துதுன்புறுத்திபார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்துதிருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?

சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
 குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறுஎன்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.சேட்டை” என்றால் என்னநாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.
 அடுத்துகுழந்தை தன்னையோ, மற்றவரையோமற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளைசொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களாஇல்லையா?
  

குறள் தீண்டத் தகாததாம்!





1796 இல் சென்னைக்கு அரசுத் துறைக்குப் பணி யாற்ற வந்த எல்லீஸ்துரை யவர்கள் தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன் றைத் தாம்வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்தி தாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தார் என்றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியரின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் கேட்க, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம்பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணிச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ்துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.
-------------(குறளும் அயோத்தி தாசரும் என்ற தலையங்கத் தில் செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 2000)

திரு.எல்லீஸ் துரை என்பவர்தான் திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் .அவரது பெயரால் மதுரை மைய பகுதியில் எல்லீஸ் நகர் அமைந்துள்ளது.......  - அகில் 
                                      

Saturday, January 22, 2011


  கடவுளை நம்பும் முட்டாள்களே
கடவுள்களை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், “யோக்கியனாகவோ, கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே ஏன்?
கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே ஏன்? மனிதன் எதனால் கெட்டகாரியங்களைச் செய்கிறான்?
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?
ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம்செய்த பிறகு செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள் அந்த மனிதனைக் கெட்டகாரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?
கெட்டகாரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும் கெட்ட காரியம் செய்யப்பட்டாதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?
மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம் துக்கம், அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும் இருந்தும் வர வேண்டும்?
மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?
நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டணையாகச் சிருஷ்டித்த கடவுளை விட வேறு அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?
இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?
ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமூதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும், பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்ததாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும் எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.
ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சமூதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.
* 14/07/1970- “உண்மைஇதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

Sunday, January 16, 2011

ஆளுமையின் அடிப்படை

1.
 வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை. 

2.
 மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும். 

3.
 திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள். 

4.
 நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை. 

5.
 உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம். 

6.
 குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம். 

7.
 கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 

8.
 மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல். 

9.
 நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம். 

10.
 நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும். 

11.
 சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை. 

12.
 முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம். 

13.
 ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை. 

14.
 உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்? 

15.
 நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை. 

16.
 கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று. 

17.
 தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும். 

18.
 பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல். 

19.
 கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம். 

20.
 பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன். 

21.
 தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம். 

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!