Sunday, December 30, 2012

அச்ச(பய)த்திற்கு மூல காரணம் நம்பிக்கையின்மை.

அச்ச(பய)த்திற்கு மூல காரணம் நம்பிக்கையின்மை.
நம்பிக்கையின்மைக்கு மூல காரணம் அறியாமை.
அறியாமைக்கு மூல காரணம் மனிதனின் சிந்தனை சக்தி.
உள்ள(மன)த்தில் சிந்தனை சக்தி பாதிக்கப்படும் போது தான் அச்சம்(பயம்) குடிகொள்கிறது. எனவே, நாம் சற்றுச் சிந்திப்போம்.

உள்ள(மன)ம் சரியாகச் சிந்திக்கும் போது அங்கு அறியாமை அகற்றப்படுகிறது. அறியாமை அகற்றப்படும் போது அங்கு நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. நம்பிக்கை உருவாக்கப்படும் போது அங்கு அச்சம்(பயம்) அகற்றப்படுகிறது. எனவே, உள்ள(மன)த்தில் நல்ல எண்ணங்களை விதைப்போம். தன்னம்பிக்கையைப் பலப்படுத்துவோம். நோயின்றி நெடுநாள் வாழ்வோம்.
ஒருவருக்குப் பாம்பு கடித்ததும் "ஐயோ! பாம்பு கடித்து விட்டதே!" என்று அலறியடிப்பார். அதற்கிடையில் அவருக்கு உடல் முழுவதும் பாம்பின் நஞ்சு(விசம்) பரவச் சாவு நெருங்கிவிடுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் பாம்பு கடித்தால், கடித்த இடத்திற்கு தண்ணீர் தெளித்துக் கழுவிப்போட்டு மருத்துவரை நாடுவர்; உயிர் தப்புவர். அச்சம்(பயம்) இல்லாதவருக்கு நஞ்சு(விசம்)பரவும் வேகம் குறைவு, அதேநேரம் விரைவாக மருத்துவரைச் சந்தித்ததால் சிகிச்சை வெற்றியளித்து உயிர் தப்புகிறார்.

 அச்ச(பய)நோய்(போபியா-Phobia) அல்லது பிற நோய்களுக்கும் உள்ளம் தான் காரணம் என்கிறோம். அதாவது, அச்சம்(பயம்) சார்ந்த பதிவுகள் உணர்வு உள்ளம்(Conscious Mind) இயங்காத வேளை உணர்வற்ற உள்ளத்தில்(Unconscious Mind) பதிந்து விடுகிறது. உணர்வற்ற உள்ளம் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. அதனால் தான் அச்ச(பய)நோய்(போபியா-Phobia) ஆளையறியாமலே தானாகவே வெளிப்படுகிறது.

எனவே, உணர்வற்ற உள்ளத்தில்(Unconscious Mind) தேவையற்ற பதிவுகளை இடம் பெறாமல் செய்ய உணர்வு உள்ளத்தை(Conscious Mind) உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அதாவது, தேவையற்ற எண்ணங்கள் உள்ளத்தில் ஓடினால், அதனை விரட்டும் வழியில் பயன்தரும் நல்லெண்ணங்களை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும். உள்ளத்தை ஒருநிலைப்படுத்தத் தேவையான தியானம், யோகாசனம், உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம். 

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!